மோடியின் பிரதமர் பதவி எதற்கு பயன்பட்டது - அமைச்சர் கேள்வி

57பார்த்தது
மோடியின் பிரதமர் பதவி எதற்கு பயன்பட்டது - அமைச்சர் கேள்வி
10 ஆண்டுகளில், மோடியின் பிரதமர் பதவி எதற்கு பயன்பட்டது என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்க பயன்பட்டதா, சீன ஆக்கிரமிப்பை தடுக்க பயன்பட்டதா‌, SC/ST மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க பயன்பட்டதா, மணிப்பூர் கலவரத்தை தடுக்கப் பயன்பட்டதா, பாஜகவிற்கு 230கோடி தேர்தல் பத்திரம் வழங்கிய வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை தடுக்க பயன்பட்டதா, மக்கள் நலன் எதற்குமே பயன்படவில்லை எனில், பதவி நாற்காலியை இறுகப்பிடித்துக் கொண்டிருப்பது ஏன் என‌ தொடர் கேள்விகளை முன் வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி