நாளை பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதை அடுத்து டெல்லி காவல்துறை நாளையும், நாளை மறுநாளும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், உள்ளிட்டவை பறக்கவும் டெல்லி காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். தடையை மீறுவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-ன் படி தண்டிக்கப்படுவர் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார். மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பல உலக தலைவர்கள் வருகை தந்துள்ளதால் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.