நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

61பார்த்தது
நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. கனமழையால் புகாவு நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீடு இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். முன்னதாக செப்டம்பர் மாதம், வடமேற்கு காங்கோவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் உயிரிழந்தனர். மே மாதத்தில், காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.