2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சி திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜக, நாதக என பழைய கட்சிகள் கங்கணம் கட்டியுள்ள நிலையில் புது என்ட்ரியான தவெகவும் அதிரடியான வியூகங்களை போட்டு வருகிறது. அதிமுக + தவெக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். 117 சீட் தர வேண்டும் இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி, அதன் பின் இரண்டரை வருடம் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தவெக பேசியுள்ளது என ப்ரியன் தெரிவித்துள்ளார்.