ஹரியானா மாநிலம் குறுகிராமில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இடையூறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில போக்குவரத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். "மோட்டார் வாகனச் சட்டம் 194இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.