"வன்மத்துடன் வதந்திகளை பரப்பும் ஒன்றிய அரசு” - முதலமைச்சர் சாடல்

70பார்த்தது
"வன்மத்துடன் வதந்திகளை பரப்பும் ஒன்றிய அரசு” - முதலமைச்சர் சாடல்
தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மடல் வெளியிட்டுள்ளார். அதில், "7வது முறையாக திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் உறுதியாக உள்ளனர். சாதி, மத, பாலின பேதமின்றி மனிதநேய திருவிழாவாக கொண்டாடப்படுவது பொங்கல் திருவிழா. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு, நாள்தோறும் வன்மத்துடன் வதந்திகளை பரப்பி வருகிறது. பண்பாட்டுத் திருவிழாவாக, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி