நம்மில் பெரும்பாலானோர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் ஞான குரு, மற்றொருவர் நவகிரக குரு ஆவார்கள். குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸீ குருவே நம: என்ற ஸ்லோகத்தில் குரு என்ற வார்த்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று அர்த்தம். இதனால் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்று என பலர் நினைக்கின்றனர்.