0.4 மீட்டர் உயர சுனாமி அலைகள் - ஜப்பானில் பரபரப்பு

95940பார்த்தது
மேற்கு ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்திற்கு அருகில் 0.4 மீட்டர் உயர சுனாமி பதிவாகியுள்ளது. ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.4 என்ற அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் பல இடங்களில் அதன் ஆரம்பகட்ட தாக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது. ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் வர தொடங்கிய கடல் நீரால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்‌. பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி