புதன் கிரகத்திற்கு அதிபதியான மீனாட்சியம்மன் வாகனமாக பச்சைக்கிளி இன்று சுமார் 5 மணி நேரமாக சிவபெருமானின் பீடத்தில் வந்து அமர்ந்தது. சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடித் திரியும் கிளி சாந்த சொரூபமாய் ஓரிடத்தில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து சிவபெருமானை தியானித்தது. இந்த தகவல் காட்டு தியாக உடுமலை பகுதியில் பரவியது. கிளி சிவபெருமானிடம் தனது குறைகளை முறையிட்டு வந்ததா? வாழ்வு முடியும் நிலையில் முக்தி கேட்டு வந்ததா? சிவனில் பாதியான உமையாளுக்கு தூதுவனாக வந்ததா? உலக உயிர்கள் இன்புடன் வாழ பிரார்த்திக்க வந்ததா என்பது கடவுளுக்கு தான் தெரியும். எதுவாயினும் கிளி அமர்ந்த நிலை அதிசயம் மிக்கதாக கருதி பொதுமக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
உடுமலையில் பஞ்சமுக லிங்கேஸ்வரர் சன்னதியில் பச்சைக்கிளி 5 மணி நேரத்துக்கு மேலாக சிவன் மேல் அமர்ந்திருந்த நிகழ்வு இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.