தூத்துக்குடியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் என்ன செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதால்தான் ரவுடிகளுக்கு துணிச்சல் வருகிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம், யானை மிதித்து உயிரிழந்தால் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. முதலில் யானைகளுக்கு புத்துணர்வு ஏற்படுத்த வேண்டும், யானைகளை அமைதிப்படுத்த முகாம்கள் நடத்தப்பட வேண்டும்” என்றார்.