விராட் கோலி உயிருக்கு ஆபத்து? - பயங்கரவாதிகள் மிரட்டல்..

ஐபிஎல் பெங்களூரு அணியின் முக்கிய வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் மாநில போலீஸ் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக அகமதாபாத் கல்லூரி மைதானத்தில் இன்று (மே 22) மேற்கொள்ள இருந்த பயிற்சியை பெங்களூரு அணி ரத்து செய்தது. வங்கமொழி நாளிதழ் ஆன ஆனந்த் பஜார் பத்திரிகையில் இந்த தகவல் வெளியான நிலையில் தற்போது பயிற்சி ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி