கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பு வைத்து சென்ற திருடர்கள்

80பார்த்தது
கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பு வைத்து சென்ற திருடர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகத்தில் பிரபலமான கோயில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலில் இருந்த நகைகள் அனைத்தும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளை கோயில் முன்பே இன்று (மே 22) அதிகாலை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி