ஐஐடியில் இந்த ஆண்டு 17,740 சீட்டுகள் நிரப்ப திட்டம்

நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் அடுத்த கல்வியாண்டில் (2024 - 25) 17ஆயிரத்து 740 பிடெக் இடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பெண்களுக்காக 17ஆயிரத்து 385 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை அதில் 355 இடங்கள் அதிகரித்துள்ளது. மறுபுறம், சில புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் என்ஐடி மற்றும் டிரிபிள் ஐடிகளிலும் மாணவர்களுக்கான இடங்கள் அதிகரித்தன. இந்த முறை 121 கல்வி நிறுவனங்களில், 59ஆயிரத்து 917 இடங்கள், கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் (JoSAA) மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி