நாற்பதுக்கு நாற்பது வெற்றியால் என்ன லாபம்?- முதல்வர் பதில்

72பார்த்தது
நாற்பதுக்கு நாற்பது வெற்றியால் என்ன லாபம்?- முதல்வர் பதில்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் 40க்கு 40 வெற்றியால் என்ன லாபம் என கேட்கின்றனர். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்வி புலம்பல் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 40க்கு 40 வெற்றிதான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம், இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம். இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசையை தீர்மானிக்கும் என முதல்வர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி