நடிகர் விஜய்க்கு இயக்குநர் வெங்கட்பிரபு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் 69வது படமான 'THE GOAT'-ஐ வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில், இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. லவ் யூ அண்ணா' என பதிவிட்டுள்ளார்.
நடிகர் மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக இந்த ஆண்டில் முதல் பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு, விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.