பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த சிறுமிகள்.. (வீடியோ)

69பார்த்தது
குஜராத் மாநிலம் வதோதராவில் ஜூன் 19ஆம் தேதி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பள்ளி வேன் டிரைவர் கவனக்குறைவாக இருந்ததால் சிறுமிகள் காயம் அடைந்தனர். மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது, திடீரென பள்ளி வேனின் பின் கதவு திறந்தது. அப்போது ஓடும் வேனில் இருந்து இரண்டு சிறுமிகள் திடீரென கீழே விழுந்தனர். இதனால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தார்சாலி வீதியில் உள்ள துளசிசம் சொசைட்டி வழியாக வேன் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி