பல் செட்டை விழுங்கிய பாட்டி.. ஷாக்கிங் நியூஸ்

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 93 வயதான மூதாட்டி ரஷியா பேகம் என்பவர், கடந்த புதன் கிழமை அன்று மாலை ரமலான் நோன்பை முடித்துக்கொண்டு நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தான் அணிந்திருந்த பல் செட்டையும் சேர்ந்து விழுங்கியுள்ளார். உடனே வலியால் அலறித்துடித்த அவரை, அவரது மகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தொடர்ந்து மூச்சு விட முடியாமலும் எச்சிலை விழுங்க முடியாமலும் அவதியுற்ற அவரை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூதாட்டியின் உணவு குழாயில் சிக்கி கொண்டிருந்த பல் செட்டை, உள் நோக்கி கருவி மூலம் லாவகமாக எடுத்தனர் மருத்துவர்கள். தற்போது அவர் நலமாக உள்ளார்.

தொடர்புடைய செய்தி