"பாஜகவை விட்ருங்க திமுகவ புடிங்க" - வெளியான பரபரப்பு ஆடியோ

561பார்த்தது
பாஜகவை விட்டு விடுங்கள் திமுகவை டார்கெட் செய்யுங்கள் என சீமான் கூறியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் பேசும் பரபரப்பான ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆடியோ லீக்கை தனது எக்ஸ் பக்கத்தில் சாட்டை துரைமுருகனுடன் தொலைபேசியில் உரையாடிய பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா வெளியிட்டுள்ளார். சின்னம் கைவிட்டு போனது குறித்து சீமான் பெரிதாக கவலைப்படவில்லை. இதற்கு பிஜேபி காரணம் இல்லை எனவும் ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ மூலம் சீமான் திமுக எதிர்ப்பை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளார் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி