ஜூனியருடன் ஓட்டம்பிடித்த சீனியர் மாணவி

61பார்த்தது
ஜூனியருடன் ஓட்டம்பிடித்த சீனியர் மாணவி
ஈரோட்டை சேர்ந்த 21 வயது மாணவி, சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் சேலம் கன்னங்குறிச்சியில் தோழிகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி முதல் தனது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். கல்லூரியில் விசாரித்தபோது 11ஆம் தேதி மாணவி டிசி வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் அதே கல்லூரியில் படிக்கும் 20 வயது மாணவரும் காணாமல் போயுள்ளார். மாணவனின் தந்தையும் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், மாயமான இருவரும் ஏற்காட்டில் இருப்பதாகவும் தெரியவந்தது. அவர்களை மீட்ட போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி