சிவராஜ்குமார் படங்களை தடை செய்யுங்க.. குமுறும் பாஜக

74பார்த்தது
சிவராஜ்குமார் படங்களை  தடை செய்யுங்க.. குமுறும் பாஜக
கர்நாடக மாநிலத்தின் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சிவராஜ்குமார். மக்களவைத் தேர்தலில் ஷிமோகா தொகுதியில் அவரது மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனால் பிரபலமாக உள்ள சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் முடியும் வரை கர்நாடகாவில் அவரின் திரைப்படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பாஜக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி