மலேரியா இல்லாத தேசமாக எகிப்த் தேர்வு

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் கூறுகையில், “மலேரியா இல்லாத தேசமாக எகிப்துக்கு வழங்கியுள்ள இந்த சான்றானது, அந்நாட்டு மக்கள் மற்றும் அரசின் அர்ப்பணிப்புக்கு கிடைத்துள்ள சான்றாகும். இதில் இருந்து விடுவித்துக் கொள்ள அயராத உழைப்பு அடங்கியள்ளது” என்றார். எகிப்துடன் சேர்த்து உலக அளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக தற்போது உள்ளன.

தொடர்புடைய செய்தி