கிரீஸ் நாட்டின் கடலோரத்தில் அமைந்துள்ள லக்கோனியா முனிசிபாலிட்டிக்கு உட்பட்ட தீவு நகரமான மோனெம்வாசியா (Monemvasia) மலைப்பாறைக்குப் பின்னால் மறைந்திருக்கிறது. பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் முக்கிய நிலப்பரப்பிலிருந்து தனியாக அமைந்த இந்த பகுதிக்கு கடல் வழியாகவும், தரைவழி சாலை மூலமும் செல்லும் வழிகள் உள்ளன. நகரின் முக்கிய வருமானம் சுற்றுலா பயணிகளால் கிடைத்து வருவதாக தெரியவந்துள்ளது.