தர்மபுரி: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 25) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர்களின் மூலமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், முறையான வல்லுநர்களை வைத்து குழு அமைத்து விசாரணை செய்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி