தர்மபுரி: எஸ்பி தலைமையில் அரசு கல்லூரியில் விளையாட்டு விழா

77பார்த்தது
2024-25 ம் கல்வி ஆண்டில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் விளையாட்டு விழா இன்று கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு )முனைவர் விஜயா தாமோதரன் அவர்கள் தலைமையற்றார்.
கல்லூரியின் உடற்கல்வி இயக்குனரும் விளையாட்டு குழு செயலாளருமான முனைவர் கு. பாலமுருகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிப்புமிகு சா. சோ மகேஸ்வரன் , கல்லூரி கல்வி இணை இயக்குனர் தர்மபுரி மண்டலம் முனைவர் பா சிந்தியா செல்வி,
மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் கே சாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 22 துறை மாணாக்கர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கம் சான்றிதழ்கள் பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவித்தார்கள்.

ஒலிம்பிக் தீபத்தை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்றி வைத்தார். மானாக்கர்களின் மல்லர் கம்பம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிக புள்ளிகளைப் படித்து 22 துறைகளில் வரலாற்றுத் துறைஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி