துணை முதல்வர் பதவி: இபிஎஸ்-க்கு உதயநிதி பதிலடி

எவ்வளவோ சீனியர்கள் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, "அதிமுகவில் பல சீனியர்கள் இருந்தும் எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சரானார் என்ற கூவத்தூர் டிராமாவை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தார்கள். மற்றவர்களை விமர்சிக்கும் முன் அவர் என்ன செய்தார் என்பதை யோசித்து பேசவேண்டும்" என பதிலடி தந்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி