
பிரபல கன்னட நடிகர் 'பேங்க்' ஜனார்தன் காலமானார்
மூத்த கன்னட திரைப்பட நடிகர் ’பேங்க்’ ஜனார்தன் உடல் நலக்குறைவால் தனது 76வது வயதில் காலமானார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது. 1948 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த பேங்க் ஜனார்தன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் அவர் முத்திரை பதித்துள்ளார். சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர் மற்றும் நாடகத்திலும் பணியாற்றியுள்ளார்.