
மாதம் ரூ.2,500.. சொன்னதை நிறைவேற்றிய டெல்லி முதலமைச்சர்
பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, டெல்லியில் உள்ள மகளிருக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “பெண்களுக்கு நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். மார்ச் 8ஆம் தேதிக்குள் பெண்கள் தங்கள் கணக்குகளில் 100 சதவீதம் பண உதவியைப் பெறுவார்கள்” என தெரிவித்துள்ளார்.