பொலிவியா: ஆருரோ பகுதியில் மதுபானம் குடித்து விட்டு குடிபோதையில் டிரைவர் ஓட்டிய சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் 37 பேர் பலியாகி உள்ளனர். உயுனி மற்றும் கொல்சானி இடத்திற்கு இடையே சென்றபோது அந்த சுற்றுலா பஸ், எதிர்திசையில் உள்ள சாலைக்கு சென்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இக்கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.