உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை, சர்வதேச செஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. அதன்படி முன்னாள் உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,833 புள்ளி), ஜப்பானின் ஹிகாரு நகமுரா (2,802) ஆகியோர் வழக்கம்போல் முதல் 2 இடங்களில் தொடருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் (2,787) 10 புள்ளிகள் அதிகரித்து 3வது இடத்தை பிடித்துள்ளார். கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா (2,758) 8வது இடத்தில் உள்ளார்.