ஓ.பன்னீர்செல்வத்திடம் எங்களை விட்டு போக வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தேனி நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றிய இபிஎஸ், "எங்கள் மீது பழி சுமத்தி பயனில்லை. நீங்களாகத்தான் போனீர்கள். சீனியர் என்கிறீர்கள். 2001 ஆண்டில் தான் நீங்கள் எம்எல்ஏ. நான் 1989ல் எம்எல்ஏ. அதிமுக மூழ்கும் கப்பல் இல்லை. கரை சேரும் கப்பல், இதில் வந்தவர்கள் கரையேறலாம். ஏறாதவர்கள் நடுக்கடலில் போகலாம்" என்று தெரிவித்துள்ளார்.