பிரபல டிக்-டாக் ஆப்பிற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இருந்தபோதிலும் இந்த ஆப் மீதுள்ள மவுஸ் குறையவில்லை. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் விதமாக, மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் அதிகம் விரும்பப்படும் அம்சமான ரீல்ஸ் வீடியோவைப் பிரத்யேகமாகக் கொண்ட புதிய ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரீல்ஸைத் தனியாக ஓர் புதிய ஆப் மூலம் வழங்குவது குறித்து அந்நிறுவன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், கூடிய விரைவில் அந்த ஆப் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.