மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைக்க சில வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல மாற்றம் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மக்னீஷியம் சத்து அடங்கிய வாழைப்பழம், கீரை வகைகள், முந்திரி, வால்நட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும். குறைந்தது 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்க வேண்டும். லாவண்டர் அல்லது பெப்பர்மின்ட் எண்ணையை பயன்படுத்த வேண்டும். யோகா, நடை பயிற்சி, மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவற்றை தினசரி சிறிது நேரம் செய்துவர உடலில் நல்ல மாற்றம் ஏற்படும்.