முன் விரோதம்.. 28 வயது ரவுடி வெட்டிக்கொலை

72பார்த்தது
முன் விரோதம்.. 28 வயது ரவுடி வெட்டிக்கொலை
சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ரவுடி சின்ன ராபர்ட் (28). இவர் நேற்று (பிப்.26) சென்னை, அண்ணா நகரில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த கொலைக்கு முன் விரோதம் தான் காரணம் என தெரியவந்துள்ளது. ராபர்ட்டின் நண்பர் கோகுலை லோகு என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்துள்ளார். இதனால் ராபர்ட் மற்றும் லோகுவிற்கு முன் விரோதம் இருந்துள்ளது. லோகுவைக் கொல்ல ராபர்ட் திட்டம் தீட்டி வந்துள்ளார். இந்த நிலையில்தான் லோகு கோஷ்டி ராபர்ட்டைக் கொலை செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி