யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி

63பார்த்தது
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரது நேர்காண்லை ஒளிபரப்பு செய்த யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணை இன்று (மே 31) நடைபெற்றது. அப்போது, ஃபெலிக்ஸ் ஜாமீன் மனுவிற்கு காவல் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்தி