சென்னை அருகே உள்ள வானகரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மோனிஷா (43) என்பவர், அப்பார்ட்மெண்டின் 10வது மாடியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்குச் சென்ற சதீஷ் (26) என்ற இளைஞர், காலிங் பெல் அடித்து வாசலுக்கு வரவழைத்தார். தொடர்ந்து, அப்பெண்ணிடம் இருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். மோனிஷா கூச்சலிட்ட நிலையில் தப்பியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.