இளம்பெண் குத்திக்கொலை.. ஆண் நண்பர் மீது சந்தேகம்?

61பார்த்தது
இளம்பெண் குத்திக்கொலை.. ஆண் நண்பர் மீது சந்தேகம்?
கிருஷ்ணகிரி: கஞ்சனூரைச் சேர்ந்த தீபா என்ற பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த தீபா, பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தன்னை 2 பேர் பின் தொடர்ந்து வருவதாக நண்பர் கௌதமிடம் போனில் தெரிவித்துள்ளார். கௌதமிற்கு மீண்டும் தீபாவிடமிருந்து அழைப்பு வந்த போது, அதில் தீபாவின் முன்னாள் ஆண் நண்பர் ஒருவரின் குரல் கேட்டுள்ளது. இதையடுத்து, ஆண் நண்பருடனான நட்பைக் கைவிட்டதால் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி