ரீல்ஸ் மோகத்தில் உயிரை பணயம் வைக்கும் இளைஞர்கள்

64125பார்த்தது
ரீல்ஸ் வீடியோ மோகத்தில் மதுரையில் உள்ள வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, அந்த நெருப்பு வழியாக ஆற்றுக்குள் குதிப்பது போல் இளைஞர்கள் சிலர் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்கள், லைக்ஸ்களை வாங்க இளைஞர்கள் இதுபோன்று எல்லை மீறுவது பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி