ஸ்மார்ட்வாட்ச் சார்ந்த அம்சங்கள் மற்றும் சேவைகளை சிறந்து விளங்குவதில் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது முதலிடத்தை பறிக்கொடுத்துள்ளது. உலகின் முன்னணி ஸ்மார்ட்வாட்ச் பிராண்டு என்ற பெருமையை ஹூவாய் நிறுவனம் பெற்றுள்ளது. ஹூவாய் நிறுவனம் ஆப்பிளை விட அதிக சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ஹூவாய் நிறுவனத்தின் சந்தை பங்குகள் 16.9 சதவீதமாக (23.6 மில்லியன் யூனிட்கள்) அதிகரித்துள்ளது. இதனால், ஹூவாய் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.