குளிர்காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சனைக்கு தேன் நல்ல தீர்வு தருகிறது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் தேன் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவினால் உதடு வெடிப்பு சரியாகும். அடிக்கடி உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவலாம். உதடு வெடிப்பிற்கு பிரத்யேகமாக இருக்கும் லிப் பாம் பயன்படுத்தலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் காலத்தில் அதிகம் தாகம் எடுக்க விட்டாலும் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது அவசியம்.