அத்திப்பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. சந்தைகளில் அதிக விலைக்கு விற்கும் இந்த பழங்களை நம் மாடி தோட்டத்திலேயே விளைவிக்கலாம். புனே ரக அத்திப்பழங்கள் மாடித்தோட்டத்தில் வளர்ப்பதற்கு ஏற்றது. குறுகிய காலத்தில் அதிக மகசூல் கொடுக்கும். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. லேசான ஈரப்பதம் இருந்தால் போதும். நிறைய சத்துக்கள் இருப்பதால் இதை கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயங்குவதில்லை.