கடந்த 15 மாதங்களாக, நடந்த போராட்டங்களால், இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கவனம் சிதறியது. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவர்கள் பங்கேற்கவில்லை. அதனால்தான், ஒலிம்பிக் மல்யுத்தத்தில், ஒருவரைத் தவிர மற்ற இந்திய வீரர்களால் வெற்றி பெற முடியவில்லை. இல்லையென்றால், கூடுதலாக 6 பதக்கங்களை நாம் வென்றிருக்கலாம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.