WPL இறுதிப்போட்டி - பெங்களூரு அணி சாம்பியன்!

76096பார்த்தது
WPL இறுதிப்போட்டி - பெங்களூரு அணி சாம்பியன்!
மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய பெங்களூரு அணி கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டி கோப்பையை தட்டித் தூக்கியுள்ளது. பெங்களூரு அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி