தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நேர வரைமுறை இல்லாமல் 12 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை வாங்குகின்றன. இந்த நேரத்தை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்றும், ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம் என்றும் வரைமுறைப்படுத்த வேண்டும். மேலும் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்க வேண்டும். அரசு விடுமுறை, பொது விடுமுறைகளில் ஊழியர்களை வேலை செய்ய நிர்பந்திக்க கூடாது. வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை நீண்ட நேரம் பணியாற்ற அறிவுறுத்தக் கூடாது.