மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் ரூ.194.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. "துணை முதல்வரின் சீரிய நடவடிக்கைகளின் பலனாக, சுய உதவிக் குழுக்கள் இன்று பொருளாதார வளர்ச்சி பெற்று, வளமான வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றன என்றால் அது மிகையில்லை. பொதுமக்கள் தொடர்ந்து வளர்ச்சிக்கு ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.