சர்வதேச மகளிர் தினத்தன்று, தனது சமூக வலைதளபக்க கணக்குகளை சில முன்மாதிரி பெண்களிடம் ஒப்படைப்பதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று (மார்ச். 08) மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் சில பிரபலமான பெண்கள் அவர் எக்ஸ் பக்கத்தில் இருந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் அனிதா தேவி உள்ளிட்டோர் பதிவுகளை வெளியிட்டனர்.