ஜம்மு காஷ்மீர்: பதேர்வாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அசுதோஷ் சிங் என்பவர் தனது 2 நண்பர்களுடன் நேற்று புத்தாண்டு கொண்டாட சென்றுள்ளார். அப்போது அசுதோஷின் குடும்பத்தினர் போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது, தொடர்பு கொள்ள இயலாததால் போலீசில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, அசுதோஷ் தங்கியிருந்த ஓட்டல் அறையின் கதவை உடைத்து போலீசார் பார்த்துள்ளனர். அப்போது, இறந்த நிலையில், முகேஷ் சிங்(39), அசுதோஷ் சிங், சன்னி சவுத்ரி ஆகியோரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.