அதிமுக ஜெயிக்க அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்த கஞ்சா கருப்பு

69பார்த்தது
தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப் பெற திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு நேற்று அக்னிசட்டி எடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுகவுக்காக பல மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறேன். அதிமுக வெற்றிப் பெற நேர்த்திக் கடன் செலுத்தினேன். மாரியம்மனிடம் வேண்டுவது கட்டாயம் நடக்கும். காமெடி பண்ணுபவர்கள் பண்ணிக் கொண்டு தான் இருப்பார்கள், ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டு தான் இருப்பார்கள்” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ்24x7

தொடர்புடைய செய்தி