மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் (செர்பியா) - ரிங்கி ஹிஜிகாடா (ஆஸ்திரேலியா) உடன் மோதினார். இதில் முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ஜோகோவிச், 2-வது செட்டை போராடி கைப்பற்றினார். ஜோகோவிச் இந்த ஆட்டத்தில் 6-0 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்று 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அதில் கமிலோ யூகோ காரபெல்லி உடன் மோத இருக்கிறார்.