ஹைதராபாத் அணி தனது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடும் வேளையில் இஷான் கிஷன் 3-வது இடத்தில் களமிறங்க உள்ளார். அவருக்கு அடுத்து கிளாசென், நிதிஷ் ரெட்டி என பேட்டிங் வரிசை அபாரமாக உள்ளது. அதன் காரணமாக அவர்களால் 300 ரன்கள் அடிக்க முடியும். நல்ல பேட்டிங் பிட்ச் கொண்ட மைதானத்தில் அது சாத்தியமாகும். அதிரடியாக விளையாடுவதற்கு சன்ரைசர்ஸ் அணி புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளது என இந்திய வீரர் ஹனுமா விஹாரி கணித்துள்ளார்.