22 வயதில் 16 வயது மாணவருடன் உறவு வைத்துக்கொண்டேன் என்று ஐஸ்லாந்து பெண் அமைச்சர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58) சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், தனது 22 வயதில் 16 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டு ஒரு குழந்தை பெற்றதாக கூறினார். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.